Vinayakar Agaval | விநாயகர் அகவல் | ஔவையார் பாடல்

Vinayakar Agaval | விநாயகர் அகவல் | ஔவையார் பாடல்

Mediabox Devotional

3 года назад

173 Просмотров

#MediaboxDevotional | #விநாயகர்அகவல் | #vinayagarchaturthi

தமிழ் மூதாட்டி ஔவையார் பாடல் |

Vinayagar Agaval is a Vinayagar Devotional songs hymn to the Hindu deity Ganesha Vinayagar. It was written in the 10th century by the Tamil poet Avaiyar. These seventy two verses of 'Agaval' is a unique form of verse, almost close to speech. Vinayagar Agaval shows us the religious path and tradition of Bhakti as it forms a part of Shaivite Hinduism.

விநாயகர் அகவல், இறைஞானம் அடைந்து முக்தி பெறும் ஆன்மீக வழியை முழுமையாகவும் படிப்படியாகவும் எழுபத்திரண்டே வரிகளில் மிக அழகாகப் பாடப்பெற்ற ஈடு இணையற்ற அற்புத நூல். இதன் ஆசிரியர் ஔவையார். இதனைத் தினமும் பாராயணம் செய்பவர்கள், விநாயகர் அருளால் ஆத்மஞானம் பெற்று, இம்மையில் வாழ்க்கை அனுபவத்தரம் உயரப்பெறுவதோடு மறுமையில் திருக்கயிலாயமும் அடையப்பெறுவர் என்பதில் யாதொரு ஐயமும் இல்லை.

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழகு தெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (5


வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதங் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூஷிக வாகன (15

இப்பொழுது என்னை ஆட்கொள்ள வேண்டித்
தாயாய் எனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந்து எழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்துஎன் உளந்தனில் புகுந்து (20

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில் (25

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிது எனக்கருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்து இருள்கடிந்து (30

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்கிசை நிலையும் (35

பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடைபிங் கலையின் எழுத்து அறிவித்து
கடையில் சுழுமுனைக் கபாலமுங் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்று எழுபாம்பின் நாவில் உணர்த்தி (40

குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டுஎழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டுஎழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45

குமுத சகாயன் குணத்தையுங் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டி
சண்முகத் தூலமும் சதுர்முக சூக்கமும்
எண்முக மாக இனிது எனக்கருளி (50

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்திமுத்தி இனிது எனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து (55

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டுக்கும் ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத் தழுத்திஎன் செவியில் (60

எல்லை யில்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டி
சத்தத்தி னுள்ளே சதாசிவம் காட்டி
சித்தத்தி னுள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய் (65

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலையறி வித்து
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே. (72

Тэги:

#vinayagar_chaturthi #vinayagar_chaturthi_celebration #vinayagar_chaturthi_poojai #ganesh_chaturthi #vinayagar_agaval #vinayagar_agaval_in_tamil #vinayagar_agaval_lyrics #ganesh_chaturthi_songs #lord_ganesha_songs #god_ganesha_songs #worship_in_tamil #ganesh_festival #ganesha_pancharatnam_stotram #vinayagar_chaturthi_special #vinayagar_chathurthi_kolam #vinayagar_chathurthi #vinayagar_agaval_seerkazhi_govindarajan #vinayagar_agaval_seerkazhi_govindarajan_padal
Ссылки и html тэги не поддерживаются


Комментарии: